In the Name of Allah, the Merciful, the Beneficent.

What are the benefits of saying salawath on Prophet Muhammad (S.A.W)?/முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதற்க்கான வெகுமதிகள் என்ன?

Muhammad sallallahu alaihi wa sallam
What-are-the-benefits-of-saying-salawath-on-Prophet-Muhammad-(S.A.W)?

முஹம்மது நபியின் மீது ஸலவாத் சொல்வது என்பது வழிபாட்டு முறைகளில் மகத்தான செயல்களில் ஒன்றாகும், மேலும் இது இவ்வுலகிலும் மறுமையிலும் மிகவும் பயனுள்ள பிரார்த்தனைகளில் ஒன்றாகும், மேலும் இது நமது நபிகள் நாயகத்தின் மீது நமது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.

Salawath salam
What-are-the-benefits-of-saying-salawath-on-Prophet-Muhammad-(S.A.W)?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதர்க்கான வெகுமதிகளிள் சில:

1.நீங்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுகிறீர்கள்:

➡முஹம்மது நபியின் மீது ஒருவர் ஸலவாத் சொல்லும் போது அவன்/அவள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுகிறார்...அதாவது குரானில் அத்தியாயம்:33,வசனம்:56

 

இன்னா அல்லாஹ வமலைக்கதஹு யுஸல்லூனா  அல்ன்னபியி யா அய்யுஹா அல்லாதீனா அமானூ சல்லூ அலைஹி வஸல்லிமூ தஸ்லீமான். 

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றனர்;முஃமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள்;நல்ல முறையில் ஸலாமும் கூறுங்கள். 

என்று குர்ஆனில் அல்லாஹ் முஃமின்களுக்கு ஸலாம் சொல்லும்படி கட்டளையிடுகிறான்.

2.அல்லாஹ் உங்களுக்கு ஆசீர்வாதங்களை அனுப்புவான்:

➡முஹம்மது நபியின் (ஸல்) மீது நாம்  ஸலவாத்து அனுப்பும்போது, ​​​​நம்மீது அல்லாஹ் ஆசீர்வாதங்களை அனுப்புகிறான்.

ஹதிஸ்: முஹம்மது நபி (ஸல்) அவ்கள் கூறினார்கள்; யார் என் மீது ஒரு முறை ஸலவாத்துச் சொல்கின்றனரோ , அவருக்கு அல்லாஹ் 10 முறை ஆசீர்வாதங்களை அனுப்புவான், மேலும் 10 தீய செயல்களை அழித்து, ஜன்னாவில் (சொர்கத்தில்) அவனது நிலையை உயர்த்துவான்.

3.அது உங்களை நபியுடன் நெருக்கமாக்கும்:

➡அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மறுமை  நாளில் எனக்கு மிக நெருக்கமான மனிதர்கள் எனக்கு அதிக ஸலவாத்து அனுப்பியவர்களாக இருப்பார்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவ்கள் கூறினார்கள்.

4.நபிகள் நாயகம் உங்கள் சலாத்தை  பெற்றுத் திருப்பி பதில் தருவார்

➡அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு பூமியில் சுற்றி வரும் மலக்குகள் உள்ளனர்,அவர்கள் என் உம்மத்தின் (followers of prophet Muhammad (S.A.W)) சலாத்தை எனக்குத் தெரிவிக்கிறார்கள்." 

5.இது உங்கள் துவாவை ஏற்றுக்கொள்ள உதவுகிறது:

➡உமர் இபின் கத்தாப் கூறினார், “துஆ வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது, நீங்கள் உங்கள் நபிக்கு ஸலவாத்து அனுப்பும் வரை அதில் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

அதனால், உங்களில் யாரும் துவா செய்யும் போது, ​​அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்துத் தொடங்கட்டும், பின்னர் நபிக்கு ஸலவாத்து அனுப்புங்கள், பின்னர் நீங்கள் உங்கள் துவாவைக்  கேளுங்கள்.நிச்சயமாக, அல்லாஹ் உங்களுக்கு பதில் அளிப்பான்.

முஹம்மது நபி (ஸல்) அவ்கள் கூறினார்கள்; நாளிலேயே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை எனவே என் மீது உங்கள் ஸலவாத்தை அதிகப்படுத்துங்கள்.

"அல்லாஹ் ஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹிம் வ அலா ஆலி இப்றாஹிம் இன்னக ஹமிதுன் மஜித்.
அல்லாஹ் ஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹிம் வ அலா ஆலி இப்றாஹிம் இன்னக ஹமிதுன் மஜித்."
Salawath meaning
What-are-the-benefits-of-saying-salawath-on-Prophet-Muhammad-(S.A.W)?


Also read:https://happylearningwithshah.blogspot.com/2022/08/what-are-important-life-lesson-through.html

Jumma mubarak

What-are-the-benefits-of-saying-salawath-on-Prophet-Muhammad-(S.A.W)?